Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இது மனித உரிமை மீறல்: மருத்துவ பணியாளர்களுக்காக குரல் கொடுத்த டிடிவி

இது மனித உரிமை மீறல்: மருத்துவ பணியாளர்களுக்காக குரல் கொடுத்த டிடிவி

பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட இருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளது மனித உரிமை மீறல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:


பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட இருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட வந்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.


தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து, வீட்டுக் காவலில் வைத்தும், கைது செய்திருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். 


வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
நாட்டுக்கோழி விலை உயர்வு - என்ன காரணம்?
அடுத்த செய்தி
அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - அன்புமணி

தொடர்புடைய செய்திகள்